Press "Enter" to skip to content

டெல்லியில் டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தை: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

புதுடெல்லி:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் உயர்மட்டக் குழுவினரும் வந்துள்ளனர். 

இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை டிரம்ப் சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து டிரம்புக்கு பிரதமர் மோடி விருந்து அளித்து கவுரவிக்கிறார்.

பிற்பகல் அமெரிக்க தூதரகத்தில் நடைபெறும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் சந்திப்பு உள்ளிட்ட சில தனியார் நிகழ்ச்சிகளிலும் டிரம்ப் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »