Press "Enter" to skip to content

டெல்லி கலவரம் எதிரொலி – பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை

பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரை யாரும் தாக்கினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்லாமாபாத்:

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் டெல்லியில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த வன்முறை சம்பவங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘வெறுப்பு அடிப்படையிலான இனவாத சித்தாந்தங்கள் தலைதூக்கினால், அது ரத்தம் சிந்துதலையே ஏற்படுத்தும். இந்தியாவில் 20 கோடி முஸ்லிம்கள் வன்முறைக்கு இலக்காக்கப்பட்டு இருக்கின்றனர்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் அவர், ‘பாகிஸ்தானில் நமது முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரையோ அவர்களது வழிபாட்டு தலங்களையோ யாரும் தாக்கினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன். நமது சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ என்றும் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »