Press "Enter" to skip to content

குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்

உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குடியாத்தம் தி.மு.க. எம்.எல்.ஏ. காத்தவராயன் இன்று காலமானார்.

வேலூர்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் காத்தவராயன் (வயது59). தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு மே மாதம் 18 தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர்.

இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. பேரணாம்பட்டு சின்ன பஜார் வீதியில் தனது சகோதரர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு இருதயத்தில் பிரச்சனை ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். அது குணமாகாததால் கடந்த மாதம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு ஆபரேசன் செய்யப்பட்டது.

டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை சீரடையவில்லை. அவரது உடல் மிகமோசமான கட்டத்தில் இருப்பதாக மருத்துவ குழு, எம்.எல்.ஏ.வின் உறவினர்களுக்கு தகவல் அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

நேற்று தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போது எம்.எல்.ஏ.வாக இருந்த கே.பி.பி.சாமி உடல் நலக்குறைவால் மரணமடைந்ததுள்ள நிலையில் மற்றொரு தி.மு.க. எம்.எல்.ஏ உயிரிழந்திருப்பது தி.மு.க.வினரிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »