Press "Enter" to skip to content

மேலும் இரு இந்தியர்களுக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – மத்திய அரசு தகவல்

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் புது டெல்லி மற்றும் தெலுங்கானாவில் மேலும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், ஆசியா கண்டத்தை கடந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளை அச்சுறுத்தி வருவதுடன் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு படுவேகமாகப் பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

இன்றைய நிலவரப்படி இந்த கொடிய வைரஸ் கிருமியின் தாக்கத்துக்கு உலகம் முழுவதும் 3 ஆயிரம் பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவை பொருத்தவரையில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சில மாநிலங்களில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டாலும் கேரளா மாநிலத்தில் மட்டும் 3 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படிருப்பதாக சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் புது டெல்லியில் ஒருவர், தெலுங்கானாவில் ஒருவர் என மேலும் இரு நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இருவரும் நலமாக இருப்பதாகவும் தீவிர மருத்துவ சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »