Press "Enter" to skip to content

டைரிகள், நாட்காட்டிகள் அச்சிட அமைச்சகங்களுக்கு தடை – மத்திய அரசு உத்தரவு

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையை தவிர பிற அமைச்சகங்கள் தனித்தனியாக டைரிகள், காலண்டர்கள் அச்சிடுவதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

புதுடெல்லி:

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையை தவிர பிற அமைச்சகங்கள் தனித்தனியாக டைரிகள், காலண்டர்கள் அச்சிடுவதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக அனைத்து அமைச்சகங்களுக்கும் கேபினட் செயலாளர் ராஜீவ் கவுபா கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் கீழ் உள்ள தகவல் தொடர்பு பணியகத்துடன், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள அமைப்புகளும் சுவர் காலண்டர்கள், மேஜை காலண்டர்கள் மற்றும் டைரிகளை தனித்தனியாக அச்சிட்டு வருகின்றன. இதன் மூலம் இரட்டை பணிகளும், அதிக நிதி செலவும் ஏற்படுகிறது’ என கூறப்பட்டு உள்ளது.

எனவே இந்த பணிகள் அனைத்தும் தகவல் தொடர்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ள ராஜீவ் கவுபா, அந்த பணியகம் அரசு காலண்டர்கள், டைரிகளை மொத்தமாக தயாரித்து பிற அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு வழங்கும் எனவும் குறிப்பிட்டு உள்ளார். இந்த உத்தரவுக்கு அனைத்து அமைச்சகங்களும் கண்டிப்பாக இணங்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டு உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »