Press "Enter" to skip to content

கொரோனா வைரசால் கர்ப்பிணிகளுக்கு அதிகம் பாதிப்பு?

கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வரும் நிலையில், அந்த நோயால் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்களா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு ஒன்று நடத்தி உள்ளது.

கொல்கத்தா:

கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. இந்நிலையில், அந்த நோயால் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்களா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு ஒன்று நடத்தி உள்ளது. அதில், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதும், சுவாச தொற்று ஏற்படுவதும் சாதாரணமான ஒன்றுதான். ஆனால், காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை பெற வேண்டும். கர்ப்பிணி பெண்களும், தற்போது குழந்தை பெற்ற பெண்களும், இவர்களில் கொரோனா வைரஸ் நோய் உறுதி செய்யப்பட்டவர்களும் தொடர்ந்து மருத்துவ உதவி பெறுவது அவசியம்.

கொரோனா வைரஸ் கர்ப்பிணி பெண்களை அதிகம் பாதிக்கிறது என்றும், குழந்தைகளுக்கு, பிறக்கும்போது அல்லது தாய்ப்பால் கொடுக்கும்போது நோய் தொற்று ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த ஆய்வின் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »