Press "Enter" to skip to content

வைரசால் பாதிக்கப்பட்டோரில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் குணமடைந்தனர் – கொரோனா அப்டேட்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரில் ஒரு லட்சத்து 32 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஜெனிவா:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. 

உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 87 ஆயிரத்து 990 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 26 ஆயிரத்து 909 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 641 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 440 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடுகள் வருமாறு:-

அமெரிக்கா – 99,116 பேர் 

இத்தாலி – 86,498 பேர் 

சீனா – 81,340 பேர்

ஸ்பெயின் – 64,059 பேர்

ஜெர்மனி – 50,178 பேர்

பிரான்ஸ் – 32,964 பேர்

ஈரான் – 32,332 பேர்

இங்கிலாந்து – 14,543 பேர் 

சுவிஸ்சர்லாந்து – 12,928 பேர்

தென்கொரியா – 9,332 பேர்

நெதர்லாந்து – 8,603 பேர்

ஆஸ்திரியா – 7,657 பேர்

பெல்ஜியம் – 7,284 பேர்

துருக்கி – 5,698 பேர்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர்/ டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை கொண்ட நாடுகளில் சில வருமாறு:-

  

அமெரிக்கா – 2,463 பேர்

இத்தாலி – 10,950 பேர்

சீனா – 74,588 பேர்

ஸ்பெயின் – 9,357 பேர்

ஜெர்மனி – 6,658 பேர்

பிரான்ஸ் – 5,700 பேர்

ஈரான் – 11,133 பேர்

சுவிஸ்சர்லாந்து – 1,530 பேர்

தென்கொரியா – 4,528 பேர்

பெல்ஜியம் – 858 பேர்

ஜப்பான் – 359 பேர்

கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு:-

அமெரிக்கா – 1,518 பேர் 

இத்தாலி – 9,134 பேர் 

சீனா – 3,292 பேர்

ஸ்பெயின் – 4,934 பேர்

ஜெர்மனி – 338 பேர்

பிரான்ஸ் – 1,995 பேர்

ஈரான் – 2,378 பேர்

இங்கிலாந்து – 759 பேர் 

சுவிஸ்சர்லாந்து – 231 பேர்

தென்கொரியா – 139 பேர்

நெதர்லாந்து – 546 பேர்

ஆஸ்திரியா – 58 பேர்

பெல்ஜியம் – 289 பேர்

துருக்கி – 92 பேர்

கனடா – 53 பேர்

போர்ச்சீகல் – 76 பேர்

பிரேசில் – 92 பேர்

ஸ்வீடன் – 92 பேர்

டென்மார்க் – 52 பேர்

இந்தோனேசியா – 87 பேர்

பிலிப்பைன்ஸ் – 54 பேர்

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »