Press "Enter" to skip to content

நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 2 வரை நீட்டிப்பு

காத்மாண்டு:

நேபாளத்தில் கொரோனா வைரசால் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்பின்னர் சூழ்நிலைக்கு ஏற்ப ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இன்றுடன் அங்கு ஊரடங்கு நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை ஜூன் 2-ம் தேதி வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, நேபாள அரசின் செய்தி தொடர்பாளர் டாக்டர் யுப்ராஜ் கத்திவாடா கூறுகையில், கொரோனா வைரசின் தாக்கத்தை கருத்தில் கொண்டு நேபாளத்தில் ஜூன் 2-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி நேபாளத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 300-ஐ நெருங்குகிறது. மேலும் கொரோனோவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »