Press "Enter" to skip to content

உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 832 விமானங்கள் மூலம் 58,318 பேர் பயணம்- மத்திய மந்திரி தகவல்

60 நாட்களுக்குப்பின் உள்நாட்டு விமான சேவை நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

இந்தியாவில் சுமார் 60 நாட்களுக்குப்பின் நேற்று உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. மேற்கு வங்காள மாநிலம் விமான சேவையை தொடங்கவில்லை. மகாராஷ்டிரா மாநிலம் 50 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது.

விமானங்கள் கேன்சல், பயணிகள் அவதி போன்ற குழப்பங்கள் நிலவினாலும், முதல் நாளில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக மத்திய விமானத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

மத்திய விமானத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘25-ந்தேதி நள்ளிரவு வரை 832 விமானங்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் 58,318 பேர் பயணம் செய்தனர். இன்று முதல் ஆந்திர மாநிலத்திலும் விமான சேவை தொடங்கியுள்ளது. இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமானது’’ எனத் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »