Press "Enter" to skip to content

சென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு?- தமிழக அரசு வழிமுறை வெளியீடு

சென்னையில் இருந்து வேறு மாவட்டத்திற்கு சென்றால் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு நாளையில் இருந்து பேருந்துகள் இயக்க அனுமதி அளித்துள்ளது. போக்குவரத்தை எட்டு மண்டலங்களாக பிரித்துள்ளது.

தற்போது போக்குவரத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

1. மண்டலத்திற்குள் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், பேருந்து, ரெயில் பயணங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை.

2. மண்டலம் விட்டு மண்டலம் செல்லும்போது, அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்யப்படும்

3. வெளிமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

4. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லியில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் பரிசோதனை கட்டாயம்

5. பரிசோதனையில் தொற்று இல்லை என்றாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம்

6. சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்கிற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்

7. பரிசோதனை முடிவில் கொரோனா பாசிடிவ் என தெரிய வந்தால் மருத்துவமனையில் அனுமதி. கொரோனா நெகட்டிவ் என தெரிய வந்தால் 7 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

8. அலுவல் ரீதியாக சென்றுவிட்டு இரண்டு நாட்களில் திரும்பி வந்தால் தனிமைப்படுத்துதல் தேவையில்லை.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »