Press "Enter" to skip to content

கொரோனா பாதிப்பில் சவுதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளியது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் ஒரே நாளில் 5,385 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் சவுதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளியது பாகிஸ்தான்.

இஸ்லாமாபாத்:

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.13 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,13,702 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 385 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அங்கு கொரோனாவால் ஒரே நாளில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 2,255 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 36,308 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமானோர் பட்டியலில் உலக அளவில் சவுதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் 15-வது இடத்தில் உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »