Press "Enter" to skip to content

சீனாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு – சிகாகோவில் சீன தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

இந்தியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் சிகாகோ நகரில் சீனாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள சீன தூதரகம் முன்பு இன்று சீனாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிகாகோவில் உள்ள சீன தூதரக அலுவலகத்திற்கு வெளியே இந்திய தேசியக் கொடியை ஏந்தி வந்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய சமூகத்தினர், சீனாவைக் கண்டித்து முழக்கமிட்டனர். சீனாவுக்கு எதிரான வாசகம் எழுதப்பட்ட அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதோடு வியட்நாம், தைவான், சிங்கப்பூர் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்துவதாகவும், தங்கள் பலத்தை காட்டி அனைத்து நாடுகளையும் மிரட்டுவதாகவும் சீனா மீது குற்றம் சாட்டினர். 

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், தென் சீனக்கடல் விவகாரம், இந்தியாவுடனான லடாக் எல்லை பிரச்சினை உள்ளிட்டவை சீனாவுக்கு மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளன.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »