Press "Enter" to skip to content

முழு ஊரடங்கு மூலமாக சென்னையில் தொற்று குறைந்து வருகிறது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முழு பொது முடக்கம் மூலமாக சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் அமைந்துள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* 136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது

* சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற அதிநவீன வசதிகள் உள்ளன

* அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது

* கொரோனா நோயாளிகளின் மன அழுத்தம் போக்க பிரத்யேக யோகா மையம்

* எய்ம்ஸ் மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையானது, கிங்ஸ் மருத்துவமனை

* கொரோனாவுக்காக 518 அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை

* தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளது

* தேவையான அளவு வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது

* கொரோனாவால் குணமடைந்தவர்கள்  57.8 சதவீதம்

* சென்னையில் முழு ஊரடங்கு மூலமாக தொற்று குறைந்து வருகிறது

* அரசு எடுத்த முடிவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது

* ஊரடங்கு காலத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி

* ரேஷனில் விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை அளித்து வருகிறோம்

* அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கியுள்ளோம்

* அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »