Press "Enter" to skip to content

ம.பி.யில் 750 மெகாவாட் சூரிய மின்திட்டம் – பிரதமர் மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கிறார்

மத்திய பிரதேசத்தில் அமைக்கப்பட்டு உள்ள 750 மெகாவாட் சூரிய மின்திட்டம் ஒன்றை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

புதுடெல்லி:

நாட்டில் தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு வேண்டிய மின்சார தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இவற்றில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் வரும் 2022-ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட கட்டமைப்பின் வழியே 175 ஜிகா வாட் மின்சாரம் பெறுவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேவா நகரில் 750 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்திட்டம் ஒன்றை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »