Press "Enter" to skip to content

மும்பை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து- 14 வாகனங்கள் மூலம் தீயணைப்பு பணி

மும்பையில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, 14 வாகனங்களில் சென்று தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை:

மும்பையில் மிகவும் பரபரப்பாக காணப்படும் போரிவளி பகுதியில் உள்ள இந்திர பிரஸ்தா ஷாப்பிங் சென்டரில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 14 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டதால் தீயணைப்பு பணி சவாலாக உள்ளது.

கட்டிடத்தின் அடித்தளத்தில் பற்றிய தீ அடுத்தடுத்து தரைத்தளம், முதல் தளத்திற்கும் பரவியது. அடித்தளத்தில் தீ ஆக்ரோஷமாக எரிந்ததால், பக்கவாட்டு சுவரில் உள்ள கிரில்களை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றி காற்று வெளியேற வசதி செய்யப்பட்டது. அதன்பின்னர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த  தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

கடந்த மாதம் நரிமன் பாயின்ட் பகுதியில் உள்ள பாங்க் ஆப் பஹ்ரைன் அண்ட் குவைத் அலுவலகத்திலும், கிராபோர்ட்டு மார்க்கெட் ஆகிய இடங்களிலும் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »