Press "Enter" to skip to content

கந்தனுக்கு அரோகரா…எல்லா மதமும் சம்மதமே…: கறுப்பர் கூட்டத்துக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்

கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:-

#கந்தனுக்கு_அரோகராpic.twitter.com/zWfRVpufXk

— Rajinikanth (@rajinikanth)

July 22, 2020

கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும்.

எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!!

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »