Press "Enter" to skip to content

டீசல் என்ஜின்களை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி – வங்காளதேச மந்திரி

வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

டாக்கா: 

வங்காளதேசத்தின் ரெயில்வே கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வகையில், அந்நாட்டுக்கு 10 அகலப்பாதை டீசல் என்ஜின்களை இந்தியா நேற்று வழங்கியது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில், டீசல் என்ஜின்களை வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த என்ஜின்களை வங்காளதேசத்திடம் நேரில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மேற்கு வங்காள மாநிலம் நடியா மாவட்டம் கெடி ரெயில் நிலையத்தில் நடந்தது.

இந்நிலையில், வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, அந்நாட்டு வெளியுறவுத் துறை மந்திரி ஏ.கே.அப்துல் மோமன் கூறுகையில், வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி. இருதரப்பினரையும் இன்னும் நெருக்கமாகக் கொண்டு வரவும், உறுதியான இருதரப்பு உறவுகளை மேலும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லவும் இது உதவும் என தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »