Press "Enter" to skip to content

5,248 பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடாதது ஏன்?- அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 5,248 மாணவர்களுக்கு வெளியிடாதது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 100% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்திருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

10ம் வகுப்பு மாணவர்கள் 9,39,829 பேர் தேர்ச்சி என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் 4,71,759, மாணவிகள் 4,68,070 தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் 6,235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 5,248 மாணவர்களுக்கு வெளியிடாதது பற்றி அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.

அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் கூறியிருப்பதாவது:

5,248 மாணவர்களில் 231 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத பதிவு செய்த பின் இயற்கை மரணமடைந்து விட்டனர்.

மாற்றுச்சான்றிதழ் பெற்று பள்ளியை விட்டு 658 மாணவர்கள் இடையிலேயே நின்று விட்டனர்.

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் மற்றும் பள்ளிகளுக்கு 4,359 மாணவர்கள் முழுமையாக வரவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »