Press "Enter" to skip to content

நாடு முழுவதும் செப்டம்பர் 30 வரை தொடர் வண்டி சேவை ரத்து

நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், பயணிகளின் டிக்கெட் கட்டணமும் திரும்ப வழங்கப்பட்டது.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையிலும் புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு ரெயில் சேவைகளை தவிர பயணிகள் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிக்கப்பட்ட பயணிகள் ரெயில் சேவைகளின் ரத்து காலம் ஆகஸ்ட் 12-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், இந்திய ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் எக்ஸ்பிரஸ், பேசஞ்சர், மெயில், புறநகர் ரெயில் சேவைகள் அனைத்தும் செப்டம்பர் 30 ஆம் தேதிவரை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பயணிகள் ரெயில் சேவை ரத்து செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஆனாலும், சிறப்பு ரெயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »