Press "Enter" to skip to content

மும்பையில் விநாயகர்சதுர்த்தியை முன்னிட்டு மும்பை- கொங்கன் இடையே சிறப்பு தொடர் வண்டிஇயக்கம்

மும்பையில் விநாயகர்சதுர்த்தியை முன்னிட்டு மும்பை -கொங்கன் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

மும்பை:

மத்திய மற்றும் மேற்கு ரயில்வே வாரியம் வெளயிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22 ம் தேதி வருகிறது. இதனை முன்னிட்டு மும்பை – கொங்கன் இடையே சிறப்புகட்டணத்துடன் கூடிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

மேற்கு ரயில்வே வரும் 17 ம் தேதி முதல் 27 -ம் தேதி வரையில் மும்பை சென்ட்ரல்-சாவந்த்வாடி, பாந்த்ரா-சாவந்த்வாடி, பாத்ரா-குடால் ஆகிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. மாநிலத்தின் கடற்கரையோர பகுதிகளுக்கு கணபதி சிறப்பு ரயில்களை இயக்க தயாராக இருந்த போதிலும் மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்து உள்ளது. 

மேலும் மும்பை -சாவந்த்வாடி , லோக்மான்யதிலக் -குடால் , ரத்னகரி- சாவந்த்வாடி ஆகிய பகுதிகளுக்கு வரும் 15 ம் தேதி முதல் செப்.,5 ம் தேதி வரையில் சிறப்புரயில்கள் இயக்கப்படுகிறது. பயணத்தின் போது பயணிகள் அனைவரும் கோவிட் 19 விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (15 ம் தேதி) முதல் துவங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »