Press "Enter" to skip to content

பிரதமருக்கான அதிநவீன விமானம் இந்தியா வருகிறது

பிரதமருக்கான அதிநவீன விமானம் இந்தியா வருகிறது. இதற்காக ஏர் இந்தியா அதிகாரிகள் அமெரிக்கா சென்றுள்ளனர்.

புதுடெல்லி:

இந்தியாவில் தற்போது ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகிய மிக முக்கியமான பிரமுகர்கள் (வி.வி.ஐ.பி.க்கள்) ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த விமானங்கள் ஏர் இந்தியா ஒன் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் நாட்டின் வி.வி.ஐ.பி.க்கள் பயன்பாட்டுக்காக 2 ஜம்போ விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 190 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1,422 கோடியே 99 லட்சத்து 36 ஆயிரம்) மதிப்பில் 2 போயிங் 777 விமானங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்காவின் போயிங் நிறுவனம் கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் இந்தியாவுக்கான முதல் போயிங் 777 விமானம் தற்போது தயாராகி விட்டது. இந்த விமானத்தை பெறுவதற்காக ஏர் இந்திய அதிகாரிகள் தற்போது அமெரிக்கா சென்றுள்ளனர். மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் சிலரும் உடன் சென்று உள்ளனர்.

இந்த போயிங் 777 விமானம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல அதிநவீன வசதிகளை கொண்டவையாகும்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »