Press "Enter" to skip to content

ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை நிறைவு- மீண்டும் முதல்வர் வீட்டிற்கு சென்ற அமைச்சர்கள்

துணை முதலமைச்சருடனான ஆலோசனை நிறைவு பெற்றதையடுத்து, அமைச்சர்கள் மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு ஆலோசனை நடத்த சென்றுள்ளனர்.

சென்னை:

சென்னையில் உள்ள இல்லத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது.

துணை முதல்வருடனான ஆலோசனைக்குப்பின் அமைச்சர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை 30 நிமிடம் நடைபெற்றது.

இந்நிலையில் முதலமைச்சருடனான ஆலோசனைக்கு பின் அமைச்சர்கள் 2வது முறையாக மீண்டும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் ஆலோசித்தனர்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நடைபெற்ற ஆலோசனை நிறைவு பெற்றதையடுத்து, மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு அமைச்சர்கள் சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அடுத்த முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ்தான் என போஸ்டர்கள் ஒட்டப்பட்ட நிலையில், அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் முதல்வரையும் துணை முதல்வரையும் அமைச்சர்கள் அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவங்களால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »