Press "Enter" to skip to content

ராணுவ தளபதி நரவனே திடீர் காஷ்மீர் பயணம்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே 2 நாட்கள் பயணமாக நேற்று வடக்கு காஷ்மீர் சென்றார்.

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. மறுபக்கம் லடாக்கில் சீனா குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், நேற்று திடீரென ராணுவ தளபதி எம்.எம்.நரவனே 2 நாட்கள் பயணமாக நேற்று வடக்கு காஷ்மீர் சென்றார்.

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்ததற்காக ராணுவ வீரர்களை பாராட்டினார்.

எல்லையில் ஊடுருவலை தடுக்க இரவு, பகல் கண்காணிப்பை உறுதி செய்ய தொழில்நுட்பத்தை பயன்படுத்த அறிவுறுத்தினார். பின்னர் ஜம்மு காஷ்மீர் லெப்டின்ட் ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து, மாநிலத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »