Press "Enter" to skip to content

மொழி தொடர்பாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது- மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிநீதி மன்றம் நீதிபதி வலியுறுத்தல்

மொழி பேரினவாதத்திற்கு இடம் அளிக்கக் கூடாது, அத்தகைய சக்திகள் தலையெடுக்க அனுமதிக்கக்கூடாது என உயர்நீதிநீதி மன்றம் நீதிபதி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை:

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்திய மந்திரியாக இருந்தபோது அவரது வீட்டில் வெடிகுண்டு வைத்த வழக்கில், தமிழ்நாடு விடுதலைப்படை இயக்கத்தைச் சேர்ந்த கலைலிங்கத்தின் பிணை மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. அப்போது, நீதிபதி கிருபாகரன் கூறியதாவது:-

தமிழ்நாடு விடுதலை, தமிழ் மொழி என்ற முழக்கங்களுடன் சில அமைப்புகள் மூகமூடி அணிந்திருக்கின்றன. தமிழ்நாடு விடுதலை, தமிழ் மொழி முழக்கங்களை எழுப்பி சில அரசியல் கட்சிகளும் அசாதாரண நிலையை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன. 

மொழிகள் தொடர்பாக மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது. மொழியை படிப்பது தனி மனிதனின் விருப்பம். 

நாட்டில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கள் மொழியை இருட்டடிப்பு செய்வதாக அச்சம் ஏற்படுத்தக் கூடாது. தமிழகத்தில் 1667-க்குப் பின் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சிக்கு வந்ததற்கு தமிழ்மொழியே காரணம். 

மதவாத சக்திகளையும், பயங்கரவாத சக்திகளையும் திடமாக எதிர்க்கவேண்டும். மொழி பேரினவாதத்திற்கு இடம் அளிக்கக் கூடாது. இதுபோன்ற சக்திகள் தலையெடுக்க அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »