Press "Enter" to skip to content

வேளாண் மசோதாவுக்கு எதிராக 28ந் தேதி ஆர்ப்பாட்டம்- காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்

வேளாண் மசோதாவுக்கு எதிராக 28ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

சென்னை:

தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகத்தில் வருகிற 28-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் இடங்களின் விவரம் வருமாறு:-

காஞ்சிபுரம் தெற்கு – தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை மேற்கு – திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சென்னை வடக்கு – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை தெற்கு – ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை கிழக்கு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தஞ்சை – இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், திருச்சி – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், கடலூர் – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தாம்பரம் – மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கோவை – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெரம்பலூர் – இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து.

மேற்கண்ட மாவட்டங்களை தவிர மற்ற மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வோர், ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் ஆகியவற்றை கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு செய்து அளித்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »