Press "Enter" to skip to content

காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உயிரிழப்பு

காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தின் நவுஷேரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ இளநிலை அதிகாரி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

ஜம்மு:

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறிய தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது.

அந்தவகையில் ரஜோரி மாவட்டத்தின் நவுஷேரா செக்டாரில் நேற்று மாலையில் திடீரென பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவ இளநிலை அதிகாரி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

இதைப்போல பூஞ்ச் மாவட்டத்தின் தேக்வார் செக்டாரில் இரவு 8.20 மணியளவிலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த அத்துமீறல்களுக்கு இந்திய வீரர்களும் சரியான பதிலடி கொடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் மோதல் நடந்தது. இது குறித்து மேலும் தகவல் எதுவும் வெளியாகவில்லை.காஷ்மீர் எல்லையில் கடந்த 5 நாட்களில் மட்டும் 4 வீரர்கள் பாகிஸ்தான் தாக்குதலுக்கு பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரின் ஸ்ரீநகர் நவுகாம் பகுதியில் மத்திய முன்பதிவு காவல் துறை படை (சி.ஆர்.பி.எப்.) முகாம் உள்ளது. நேற்று மதியம் இங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் திடீரென முன்பதிவு படை போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

பயங்கரவாதிகளின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் மத்திய முன்பதிவு படை காவல் துறையினர் 2 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 3 பேர் சிகிச்சைக்காக அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »