Press "Enter" to skip to content

பப்புவா நியூ கினியாவில் 5.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் 5.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

போர்ட்மோரஸ்பி:

தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள நியூ பிரிட்டன் மாகாணத்தின் தலைநகரான கிம்பேவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியது.

ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கம் பூமிக்கு அடியில் 59.34 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

கிம்பே நகரம் மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள பல நகரங்களிலும் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சில வினாடிகளுக்கு மேல் நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் கடும் பீதியடைந்தனர். எனவே அவர்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »