Press "Enter" to skip to content

கர்நாடகத்தில் தற்போதைக்கு பள்ளிகளை திறக்கக்கூடாது: மந்திரி ஈசுவரப்பா வலியுறுத்தல்

கர்நாடகத்தில் தற்போதைக்கு பள்ளிகளை திறக்கக்கூடாது என்று கர்நாடக கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி ஈசுவரப்பா வலியுறுத்தி உள்ளார்.

பெங்களூரு :

கர்நாடக கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி ஈசுவரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் வித்யாகாம திட்டத்தின் கீழ் சில பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதற்கும், கொரோனா பரவலுக்கும் தொடர்பு இல்லை. இந்த வித்யாகம திட்டம் இல்லாதபோதும், கொரோனா பரவியுள்ளது. கொரோனா பரவுகிறது என்பதற்காக அந்த திட்டத்தை நிறுத்த முடியுமா?. கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து சில விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

பள்ளிகளை திறப்பது குறித்து அரசு அனைத்து தரப்பினருடன் ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கும். எனது தனிப்பட்ட விருப்பம் என்னவென்றால், கர்நாடகத்தில் தற்போதைக்கு பள்ளிகளை திறக்கக்கூடாது. மத்திய மந்திரி மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவுக்கு இறந்துவிட்டதால் நாடாளுமன்றத்தை மூடிவிட முடியுமா?. சில விவசாயிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர். அதற்காக விவசாய பணிகளை நிறுத்திவிடலாமா?.

கர்நாடக சட்டசபைக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் தேர்வாகி வந்துள்ள எம்.எல்.சி.க்களுடன் ஆலோசனை கூட்டம் எனது தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் எஸ்.ஆர்.பட்டீல், உறுப்பினர்கள் மகாந்தேஷ் கவடகிமட், எதிர்க்கட்சி கொறடா நாராயணசாமி, அப்பாஜிகவுடா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »