Press "Enter" to skip to content

அல்ஜீரிய அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு – பிரான்ஸ் நாட்டு மருத்துவமனையில் அனுமதி – கொரோனா வைரசா?

அல்ஜீரிய நாட்டின் அதிபர் உடல்நலக்குறைவு காரணமாக பிரான்ஸ் நாட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரிஸ்:

உலகையே உலுக்கி வரும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கு பல நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் என பல தலைவர்களும் இலக்காகி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் ஜான்சன், பிரேசில் அதிபர் போல்சனேரோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டு பின்னர் அதில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், அல்ஜீரிய நாட்டின் அதிபராக செயல்பட்டு வருபவர் அப்தல்மஜித் டெம்போனி. 75-வயதான இவருக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், அதிபரின் மூத்த ஆலோசகர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அப்தல்மஜித் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார். ஆனால், அவர் கொரோனா பரிசோதனை செய்யவில்லை.

இந்நிலையில், அதிபர் அப்தல்மஜித்திற்கு கடந்த செவ்வாய்கிழமை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அல்ஜீரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனால், சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததையடுத்து, அதிபர் அப்தல்மஜித் மேல் சிகிச்சைக்காக பிரான்ஸ் பயணம் மேற்கொண்டார்.

தற்போது அவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், அதிபர் அபதலுக்கு கொரோனா பரவியுள்ளதா? என்ற தகவலை அல்ஜீரிய அரசு தரப்பு தெரிவிக்க மறுத்துவிட்டது. 

ஆனாலும், அதிபருக்கு கொரோனா பரவியிருக்கலாம் எனவும், அதனால் தான் சிகிச்சைக்காக அவர் பிரான்ஸ் சென்றுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள்

செய்தி வெளியிட்டுள்ளன. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »