தீபாவளி சிறப்பு பேருந்துகள் நவ.11 முதல் இயக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தீபாவளி சிறப்பு பேருந்துகள் நவ.11 முதல் இயக்கப்படுகின்றன.
* வழக்கம் போல சென்னையில் 5 இடங்களில் இருந்து தீபாவளிக்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
* 13 முன்பதிவு மையங்களில் இதுவரை 27 ஆயிரம் பேர் தீபாவளிக்கு வெளியூர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.
* கடந்தாண்டை விட இந்தாண்டு தீபாவளிக்கு குறைந்த அளவிலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
* கடந்தாண்டு 18,544 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு தீபாவளிக்கு முன் 14,757 பேருந்து இயக்கப்படுகின்றன.
* நவ.11, 12, 13ந்தேதிகளில் தீபாவளி சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
* தீபாவளிக்குப்பிறகு நவ. 15, 16, 18 தேதிகளில் மீண்டும் சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar