Press "Enter" to skip to content

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை:

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த மாதம் முடிவடைந்தநிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் பள்ளிகளில் வரும் 16ஆம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சரியான தருணம் அல்ல என கருத்துக்கள் எதிரொலியால், பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சருடனான ஆலோசனையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கேபி அன்பழகன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆலோசனைக்கு பிறகு பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு  வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »