Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் தேர்தல்- விஸ்காசின் மாநிலத்தில் ஜோ பிடன் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் விஸ்காசின் மாநிலத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.

வாஷிங்டன்:

கொரோனா பரவல் சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 238 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 218 வாக்குகள் பெற்றுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் விஸ்காசின் மாநிலத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே, அமெரிக்காவின் நியூயார்க், வெர்மான்ட், மசாசூட்ஸ், நியூஜெர்சி, கனக்டிகட், டெலவர் மாநிலங்களில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »