Press "Enter" to skip to content

டெல்லி இந்தியாவின் கொரோனா தலைநகரம் ஆகும் – உயர்நீதிநீதி மன்றம் அதிருப்தி

டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் விரைவில் டெல்லி இந்தியாவின் கொரோனா தலைநகரம் ஆகும் என்று உயர்நீதிநீதி மன்றம் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

புதுடெல்லி:

வடக்கு டெல்லி மாநகராட்சியில் பணிபுரியும் மருத்துவர்கள், துணைமருத்துவ ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு ஊதியம் வழங்கப்படாதது குறித்து டெல்லி உயர்நீதிநீதி மன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை ஹிமா கோலி, சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது, ஆளும் ஆம் ஆத்மி அரசின் ஒழுங்கில்லாத செயல்பபாட்டால் டெல்லியில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், விரைவில் டெல்லி இந்தியாவின் கொரோனா தலைநகரம் ஆகும் என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மக்களின் நலத்தை டெல்லி அரசு எளிதாக எடுத்துக்கொண்டிருப்பதாகவும், ஆனால் தாங்கள் அதை முக்கியமானதாக கருதி தனியாக கவனிக்கப்போவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதிகமான எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனைகளை நடத்துவதாக டெல்லி அரசு கூறும் அதேவேளையில், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர்கள் கூறினர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »