Press "Enter" to skip to content

நாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவோம் – டிரம்ப் நம்பிக்கை

அமெரிக்க அதிபர் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவோம் என் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்தது. இதில் குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

வல்லரசாக பெருமைப்பட்டு கொள்ளும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் அதிபர் என்ற பொறுப்புடன் யார் நுழைய போகிறார்கள். யார் வெற்றி பெறுவார்கள் என்ற முடிவை  எதிர்பார்த்து உலக நாடுகள் ஆவலுடன் உள்ளன.

எனினும், தேர்தல் முடிந்து 3 நாட்கள் கடந்த பின்னும் வாக்கு எண்ணிக்கையில் இழுபறியான நிலை நீடித்து வருகிறது.

சமீபத்திய தரவுகளின்படி, பைடன் 264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார்.  பைடனுக்கு 50.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், சமீபத்திய கணிப்புகளின்படி டிரம்பிற்கு 48.3 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

இதற்கிடையில், வாக்கு எண்ணிக்கையில் மோசடி ஏற்பட்டுள்ளதாக பல மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனால், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகமல் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டிரம்ப் கூறியதாவது;-

வாக்காளர் மோசடி, தேர்தல் மோசடிக்காக அனைத்து மாகாணங்களும் அமெரிக்காவால் சட்டப்பூர்வமாக சவால்களை சந்திக்கலாம் என பிடன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்காக நிறைய ஆதாரங்கள் உள்ளன… ஊடகங்களை சற்று பாருங்கள்… நாம் நிச்சயம் வெற்றிபெற்றுவோம்… அமெரிக்காவே முதன்மை.

என தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »