Press "Enter" to skip to content

வேல் யாத்திரை- பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கையாக கைது

வேல் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பா.ஜ.க. சார்பில் இன்று வெற்றிவேல் யாத்திரை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரை முருகபெருமானின் அறுபடை வீடுகள் உள்ள நகரங்கள் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பா.ஜ.க.வினர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பா.ஜ.க.வினரின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழக அரசு சார்பில் பா.ஜ.க.வினரின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கவில்லை என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. இதனால் திருத்தணியில் காவல் துறையினர் ரோந்து சுற்றி வந்தனர்.

இந்நிலையில் வேல் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த 6 பாஜக நிர்வாகிகளை இரவோடு இரவாக காவல் துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் ராஜ்குமார், பாஸ்கரய்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாஜக வேல் யாத்திரை தொடங்க உள்ள திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாஜகவின் வேல் யாத்திரையை தடுக்க திருத்தணியில் 6 மாவட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூரை சேர்ந்த 1010 காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவில் முன்பு தடுப்புகளை அமைத்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »