Press "Enter" to skip to content

பீகார் சட்டசபை தேர்தல் – இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

பீகார் சட்டசபைக்கு நடைபெறும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

பாட்னா:

பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவடைவதால், அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 28-ம் தேதி நடந்தது. 

இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் 17 மாவட்டங்களில் அடங்கி உள்ள 94 சட்டசபை தொகுதிகளில் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, தேர்தல் நடக்கும் 19 மாவட்டங்களில் அடங்கியுள்ள 78 சட்டசபை தொகுதிகளில் நேற்று முன்தினம் பிரசாரம் ஓய்ந்தது.

இறுதிக்கட்ட தேர்தலை சந்திக்கும் இத்தொகுதிகளில் 2 கோடியே 35 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள் ஆவர். 1,200-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், பீகார் சட்டசபைக்கு நடைபெறும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

மூன்று கட்டமாக பதிவான வாக்குகளை எண்ணும் பணி 10-ம் தேதி நடக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »