Press "Enter" to skip to content

பொதுமக்களுக்கு சிரமமின்றி தீபாவளியை கொண்டாட வேண்டும்- தீயணைப்புத்துறை இயக்குனர் வேண்டுகோள்

தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிப்பவர்கள் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதவாறு பண்டிகையை கொண்டாடுங்கள் என தீயணைப்புத்துறை இயக்குனர் ஜாபர் சேட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை:

தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குனர் ஜாபர் சேட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா அச்சம் உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் இந்த காலச் சூழலில், நோய்த்தொற்று பரவாமல் தடுக்கவும் சுகாதாரம் பேணவும்
சமூக இடைவெளி விட்டு தீபாவளி திருநாளை கொண்டாடுவதே சரியாக இருக்கும்.

தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறவர்கள் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதவாறு மிகுந்த கவனத்துடன்
பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் வெடி வெடிக்க ஆசைப்பட்டால், ஆபத்து இல்லாத, அதிக சத்தம் இல்லாத வெடிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெடி வெடிக்கும்
போது குழந்தைகளுக்கு பாதுகாப்பாக பெற்றோர் உடனிருக்க வேண்டும். கொண்டாட்டமான நேரம் என்பதால் கவனச்சிதறல் ஏற்பட நிறைய
வாய்ப்பு இருக்கிறது.

காற்று மாசுபாடும், ஒலி மாசுபாடும் மிகுந்த பாதிப்புகளை உருவாக்கக் கூடியவை. நம்முடைய கொண்டாட்டம் அடுத்தவர்களை பாதிப்பதாக
இருக்கக்கூடாது.

கொரோனா நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க தமிழக அரசு பலவிதமான முன்னெடுப்புகளை செய்து வரும் சூழலில், கூட்டங்களை குறைத்து,
பட்டாசுகளை முடிந்த வரையில் தவிர்த்தும் எளிமையாக, எல்லோருக்கும் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். ஒருவேளை விபத்தோ,
அசம்பாவிதங்களோ நடந்தால் கொஞ்சம் கூட தாமதிக்காமல் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தீபாவளியை கொண்டாடும் மக்களுக்கு தமிழ்நாடு தீயணைப்புத்துறை உறுதுணையாக இருக்கும். அதேநேரம், தமிழக மக்களும் முழு ஒத்துழைப்பு
வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »