Press "Enter" to skip to content

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் 12 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் 12 ஆயிரம் காவல் துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை:

தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தீபாவளி பொருட்கள் விற்பனை இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள், தங்க நகைகள் வாங்குவதற்காக தியாகராயர்நகர், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை உள்பட கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்களிடமும், வியாபாரிகளிடமும் பணபுழக்கம் அதிகம் இருக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் போர்வையில் சமூகவிரோதிகள் நடமாட்டத்தை கண்காணிக்க காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 12 ஆயிரம் காவல் துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகை காலத்தின்போது சிறிய கடைகள், சாலையோர வியாபாரிகளிடம் கீழ் மகன் (ரவுடி)கள் மாமூல் தொல்லை அதிகம் இருக்கும். இந்த ஆண்டு கீழ் மகன் (ரவுடி)கள் மாமூல் வசூலிப்பதை தடுப்பதில் காவல் துறை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்த கீழ் மகன் (ரவுடி)கள் கைது செய்யப்பட்டனர். இதுவரையில் 200 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளனர்.

கடந்த 3 நாட்களில் மட்டும் காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் 162 கீழ் மகன் (ரவுடி)கள் சிக்கினர். இவர்களில் நேற்று மட்டும் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »