Press "Enter" to skip to content

ஏழை மாணவர்களுக்கு இலவச வகுப்பு… மறைந்த தாயாரின் ஆசையை நிறைவேற்றும் மகன்

மத்திய பிரதேச மாநிலத்தில் ஏழை எளிய மாணவர்களை கைதூக்கி விடுவதற்காக பாரக் தீவன் என்பவர் இலவசமாக படிப்பு சொல்லித் தருகிறார்.

ஜபல்பூர்:

மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டம், குவாரிகாட் பகுதியைச் சேர்ந்தவர் பாரக் தீவன். இவர் அப்பகுதியில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக பாடம் நடத்தி வருகிறார். நர்மதை ஆற்றங்கரையில் வெட்டவெளியில் நடத்தப்படும் இந்த வகுப்புகளில் ஏழை மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று படித்துவருகின்றனர். 

வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மாணவர்களின் எதிர்காலத்திற்காக இவர் அக்கறை செலுத்தி வருவதால் அப்பகுதி மக்களின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளார்.

இதுபற்றி பாரக் தீவன் கூறுகையில், ‘ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கென தனியாக ஒரு பள்ளிக்கூடத்தை தொடங்க வேண்டும் என என் தாயார் விரும்பினார். அவர் மறைந்த பிறகு அவரது ஆசையை நிறைவேற்றும் முதல் முயற்சியாக 2016ல் இந்த இலவச வகுப்பை தொடங்கினேன். தற்போது 120 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 

எனது மாணவர்களில் குறைந்தபட்சம் ஒரு மாணவர் ஐஏஎஸ் தகுதியும், ஒருவர் ஐபிஎஸ் தகுதியும் பெற வேண்டும் என விரும்புகிறேன். இதற்காக அவர்களை தயார்படுத்துகிறேன். ஏழை எளிய மாணவர்களுக்காக தனியாக பள்ளி தொடங்கவும் திட்டமிட்டுள்ளேன். அந்தப் பள்ளியில் சீனியர் மாணவர்கள் மூலம் பாடம் நடத்தப்படும்’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »