Press "Enter" to skip to content

சீனாவிலும் பரவியது உருமாறிய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது சீனாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.

பீஜிங்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)  கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உருமாற்றம் அடைந்துள்ளது.

உருமாறிய கொரோனா முதன்முதலில் இங்கிலாந்து நாட்டில் உறுதி செய்யப்பட்டது. இந்த புதியவகை உருமாறிய கொரோனா பழைய கொரோனாவை விட 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் மிகுந்த அச்சமடைந்துள்ள பல நாடுகள் இங்கிலாந்துடனான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.

ஆனாலும், உருமாறிய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இங்கிலாந்து தவிர பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சீனாவிலும் தற்போது உருமாறிய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் இருந்து சீனா திரும்பியுள்ள 23 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு உருமாறிய நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பல நாடுகளில் உருமாறிய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவி வருவதால் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »