Press "Enter" to skip to content

லண்டனில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறிய நடிகை பிரியங்கா சோப்ரா – காவல் துறையினர் எச்சரிக்கை

பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா லண்டனில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதால் காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

லண்டன்:

இங்கிலாந்தில் புதிய வகை  கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் தீவிரமானதால், அங்கு  நாடுமுழுவதும்  ஊரடங்கு  மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும், கடுமையான தண்டனைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதிகளின்படி, சிகை அலங்கார முடித் திருத்தகம் மற்றும் ஸ்பாக்கள் உள்ளிட்ட தனிப்பட்ட பராமரிப்பு சேவைகள் மூடப்பட வேண்டும்.

டெக்ஸ்ட் ஃபார் யூ படத்தில் சாம் ஹியூகன், செலின் டியான், ரஸ்ஸல் டோவி மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்கின்றனர். நிக் ஜோனாசும் ஒரு சிறிய தோற்றத்தில் நடிக்கிறார்.இப்படத்தை ஜிம் ஸ்ட்ரூஸ் இயக்குகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஊரடங்கிற்கு முன் நடிகை பிரியங்கா சோப்ரா லண்டன் சென்றார். அங்கு கணவர் நிக் ஜோனாஸுடன் தங்கியுள்ளார்.

படப்பிடிப்பு முதலில் ஜனவரி இறுதிக்குள் முடிவடையும் என்று கருதப்பட்டது. ஆனால் ஊரடங்கால்  தாமதமாகிவிட்டது. அனைவருக்கும் விரைவாக அமெரிக்கா திரும்புவதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பு நிர்வாகம் செய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 4.55 மணியளவில் பிரியங்கா தனது தாயார் மருத்துவர் மது சோப்ரா மற்றும் செல்ல நாய் டயானாவுடன் சிகை அலங்கார நிலையத்திற்கு சென்றனர். பிரபல சிகை அலங்கார நிபுணர்  ஜோஷ் வூட்டின் சலூனுக்கு சென்றார்.

இதைத்தொடர்ந்து ஊரடங்கு விதிகளை மீறிய பிரியங்கா சோப்ராவை காவல் துறையினர் எச்சரித்தனர். முடித் திருத்தகம்  உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் ஏதும் விதிக்கவில்லை. எவ்வாறாயினும் சூழ்நிலைகள் மற்றும் தொடர்புடைய சட்டங்களை மறுஆய்வு செய்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் வரவேற்புரை உரிமையாளருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »