Press "Enter" to skip to content

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் – வைகோ

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான அனைவரையும் சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாமல், கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் சூறையாடப்பட்ட கொடிய பாலியல் வன்கொடுமைக்கு ஆளும் அ.தி.மு.க. அரசே பொறுப்பு என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோது, உத்தமர்கள் என்று கூறிய அ.தி.மு.க.வினரின் முகத்திரை தற்போது சி.பி.ஐ. நடவடிக்கையால் கிழிந்துவிட்டது.

சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கை முழுமையாக விசாரணை நடத்தி, பின்னணியில் இருக்கும் ஆளும் கட்சி புள்ளிகள் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்க வேண்டும். பெண்களை தெய்வமாக வணங்கிப் போற்றும் தமிழ்நாட்டில், பொள்ளாச்சியில் நடந்த கூட்டுப் பாலியல் கொடுமை தமிழக வரலாறு இதுவரை காணாத கொடிய நிகழ்வு ஆகும். தமிழகத்துக்கு அவமானத்தையும், தலைகுனிவையும் ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான அனைவரையும், சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாமல், கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »