Press "Enter" to skip to content

மேற்கு வங்காளத்தில் சிறுத்தையுடன் வெற்றுக்கரங்களுடன் சண்டையிட்டு உயிர்பிழைத்த வீரப்பெண்

தேயிலை தோட்டத்தில் நுழைந்த சிறுத்தையுடன் வெற்றுக்கரங்களுடன் சண்டையிட்டு உயிர்பிழைத்த வீரப்பெண் பற்றி செய்தி சமூக வலைதளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

ஜல்பைகுரி:

மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் பட்கவா தேயிலை தோட்டத்தில் பெண் ஒருவர் பணிக்கு சென்றிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுத்தை ஒன்று திடீரென அவரை தாக்க வந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண், ஆயுதமின்றி நிராயுதபாணியாக நின்றாலும், வெற்றுக்கரங்களுடன் சிறுத்தையுடன் சண்டை போட ஆரம்பித்தார். 10 நிமிட போராட்டத்திற்கு பின்பு சிறுத்தை அவரை தாக்குவதை நிறுத்திவிட்டு காட்டிற்குள் ஓடி மறைந்தது.

சிறுத்தையின் தாக்குதலால் அவர் காயம் அடைந்திருந்தார். சிறிது நேரத்திற்கு பின்பு, அக்கம்பக்கத்தில் வேலைபார்த்த மற்ற தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இதை அறிந்தனர். உடனே அவர்கள், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிறுத்தையுடன் தனி ஆளாக வெற்றுக்கரங்களுடன் போராடி உயிர்பிழைத்த அந்த வீரப்பெண்மணியின் பெயர் லீலா ஓரான் என்று தெரியவந்தது. “அந்த பெண்மணியின் பலம் வியக்கத்தக்கது என்றும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் சிகிச்சை பெறுகிறார்” என்றும் மருத்துவர்கள் கூறினர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »