Press "Enter" to skip to content

சூடானில் பழங்குடியினர் இடையே மோதல் – 83 பேர் பலி

சூடானின் மசாலித் என்ற பழங்குடியின குழுவினருக்கும் மற்றும் அராப் பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 83 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

கார்ட்டூம்:

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஏராளமான பழங்குடி இனங்கள் உள்ளன. இவர்களுக்குள் அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

இந்தநிலையில் சூடானின் மேற்கு பகுதியில் உள்ள டார்பூர் மாகாணத்தின் தலைநகர் அல்ஜெனீனாவில் மசாலித் என்ற பழங்குடியின குழுவினருக்கும் மற்றும் அராப் பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பையும் சேர்ந்த தனி நபர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கோஷ்டி மோதலாக வெடித்தது. இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் கூர்மையான ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். வீடுகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. 2 நாட்களாக நடந்த இந்த மோதலில் 83 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் இந்த மோதலில் அதிரடிப்படை வீரர்கள் உள்பட 160-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து டார்பூர் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த மாகாணத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சூடான் அரசு உயர்மட்ட அதிகாரிகளை அங்கு அனுப்பி வைத்துள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »