தமிழகத்தில் சாலைப் பணிகளுக்காக மத்திய வரவு செலவுத் திட்டத்தில் 1.03 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் இன்று 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டத்தை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். வரவு செலவுத் திட்டத்தில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
* தமிழகத்தில் சாலைப் பணிகளுக்கு 1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு. 3,500 கி.மீ தொலைவில் சாலைகள் அமைக்கப்படும்.
* சென்னை மெட்ரோ தொடர் வண்டி விரிவாக்க திட்டத்திற்கு ரூ.63246 கோடி ஒதுக்கீடு
*தொடர்வண்டித் துறை துறை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.1.10 லட்சம் கோடி
* காற்று மாசை கட்டுப்படுத்த 22.17 கோடி
* பொது போக்குவரத்து பேருந்து வசதிகளை மேம்படுத்த ரூ.18 ஆயிரம் கோடி
* மின் துறைக்கு ரூ. 3.05 லட்சம் கோடி ஒதுக்கீடு
* புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முகமைக்கு ரூ.1500 கோடி
* காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் திட்டப்பணிகளுக்கு ரூ.2217 கோடி ஒதுக்கீடு
* சூரிய ஒளி மின் சக்தி உற்பத்தி கழகத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு
* பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதன திட்டங்களுக்கு ரூ.20000 கோடி ஒதுக்கீடு.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar