Press "Enter" to skip to content

நாகையில் மத்திய குழு ஆய்வு- ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

நாகை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

நாகை:

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் பல இடங்களில் கன மழை பெய்தது. இந்த அடைமழை (கனமழை) காரணமாக சில மாவட்டங்கள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காகவும், அவற்றை மதிப்பீடு செய்வதற்காகவும் மத்திய குழுவினர் தமிழகம் வந்திருக்கின்றனர். அவர்கள் 2 பிரிவாக பிரிந்து விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழைச்சேதங்களை பார்வையிடுகின்றனர்.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 2½ லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தவிர 1,500 ஏக்கரில் உளுந்து மற்றும் மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களும் சேதம் அடைந்தன. இந்த நிலையில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்தியக்குழுவினர் ஆய்வு செய்த நிலையில், தற்போது பருவம் தவறி பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களையும் மத்தியக்குழுவினர் 2-வது முறையாக நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதேபோல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் கடந்த ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட மழை வெள்ள சேதங்களை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் நாகை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழு நேரில் ஆய்வு செய்து வருகிறது.

கருங்கண்ணியில் பாதிக்கப்பட்ட பயிர்களை ரணஞ்சே சிங், கார்க், பால் பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »