Press "Enter" to skip to content

இந்திய – அமெரிக்க கூட்டுராணுவப் பயிற்சியில் பங்கேற்க வந்த அமெரிக்க ராணுவ வீரருக்கு கொரோனா

இந்திய – அமெரிக்க கூட்டுராணுவப் பயிற்சியில் பங்கேற்க வந்த அமெரிக்க ராணுவ வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.

பிகானிர்:

‘யுத்தப் பயிற்சி’ எனப்படும் இந்திய-அமெரிக்க வீரர்களின் கூட்டு ராணுவப் பயிற்சி, ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்தப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, அமெரிக்க வீரர்கள் ராஜஸ்தானின் சூரத்கர் நகருக்கு கடந்த சனிக்கிழமை வந்தனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர்களில் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர் வந்த கொரோனா பரிசோதனை முடிவுகளில், குறிப்பிட்ட வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.

அந்த வீரர் ஆரம்பம் முதலே தனிமையில்தான் இருக்கிறார். அவர் கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்கேற்கவில்லை. அது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »