Press "Enter" to skip to content

கொரோனாவால் சொந்த ஊர் சென்ற 1¼ கோடி தொழிலாளர்கள் மீண்டும் பணியிடங்களுக்கு திரும்பினர்

கொரோனா கால ஊரடங்கின்போது சொந்த மாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் மீண்டும் தங்களது பணியிடங்களுக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

புதுடெல்லி:

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மந்திரி சந்தோஷ்குமார் கங்குவார் நேற்று பதில் அளித்தார்.

கொரோனா கால ஊரடங்கின்போது நாடு முழுவதும் 1¼ கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்றதாகவும், அவர்களில் 1 கோடியே 23 லட்சத்து 70 ஆயிரத்து 365 பேர் மீண்டும் தங்களது பணியிடங்களுக்கு திரும்பியுள்ளதாகவும் பதில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாநிலங்கள் வாரியாக இது தொடர்பான புள்ளி விவரமும் வெளியிடப்பட்டது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு 32 லட்சத்து 49 ஆயிரத்து 638 தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர். அடுத்ததாக பீகார், மேற்கு வங்காளம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அதிகளவில் தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர். தமிழகத்துக்கு 72 ஆயிரத்து 145 பேர் திரும்பி இருக்கிறார்கள். குஜராத் மாநிலம் மட்டும் இது தொடர்பான தரவுகளை அளிக்கவில்லை.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »