Press "Enter" to skip to content

பெண் பத்திரிகையாளரை மிரட்டியதால் ஜோ பைடனின் உதவியாளர் பணியிடை நீக்கம்

பெண் பத்திரிகையாளரை மிரட்டியதால் ஜோ பைடனின் உதவியாளர் டி.ஜி. டக்லோ தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ந் தேதி பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து அவர் வெள்ளை மாளிகையில் குடியேறினார்.

இதையடுத்து தன்னுடைய பத்திரிகை இணை செயலாளராக டி.ஜி. டக்லோ என்பவரை அவர் நியமித்தார்.

இந்தநிலையில் சமீபத்தில் டி.ஜி.டக்லோ வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் கோபம் அடைந்த டி.ஜி. டக்லோ அந்தப் பெண் பத்திரிகையாளரை நோக்கி ‘நான் உன்னை அழித்துவிடுவேன்’ என்று ஆவேசமாக கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் டி.ஜி. டக்லோவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் இந்த விவகாரத்தில் டி.ஜி. டக்லோ தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒரு வார காலத்துக்கு ஊதியமின்றி அவர் பணி நீக்கம் செய்யப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மேலும் டி.ஜி. டக்லோ தனது செயலுக்காக சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரிடம் நேரில் மன்னிப்பு கேட்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இருப்பினும் டி.ஜி.டக்லோ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனாதிபதி ஜோ பைடன் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »