Press "Enter" to skip to content

வருகிற 23-ந்தேதி தமிழக இடைக்கால வரவு செலவுத் திட்டம் தாக்கல்

வருகிற 23-ந்தேதி தமிழக இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

சென்னை: 

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டத்தை 23.02.2021-ம் நாள், செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு, சென்னை-600 002, வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கம், மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள். 

மேலும், 23.02.2021-ம் நாள் செவ்வாய்க்கிழமை, முற்பகல் 11 மணிக்கு 2021-22-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும் என சட்டபேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

தேர்தல் நேர வரவு செலவுத் திட்டம் என்பதால் புதிய இலவச அறிவிப்புகள் இடம்பெற கூடும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »